ஆண்,பெண் அனைவருக்கும் ஹார்மோன் சமநிலை செயல்பாடு மிகவும் முக்கியமான விஷயமாகும்.ஹார்மோன்கள் சமநிலையுடன் இருந்தால் உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படுவது கட்டுப்படும்.
நாம் உண்ணும் ஆரோக்கிய உணவுகள் மூலம் ஹார்மோன் சமநிலையை உறுதிப்படுத்த முடியும்.நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.ஆனால் சில வகை இரசாயனங்களால் உடலில் ஹார்மோன் சீர்குலைவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது.
ஹார்மோன் சீர்குலைவால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்:
*முடி உதிர்வு *தாமதமான மாதவிடாய் *வாந்தி குமட்டல் *அதிக இரத்தப்போக்கு *உடல் சோர்வு
*மனச்சோர்வு *கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை
ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தும் கெமிக்கல்:
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதுமை உணவுகளை உட்கொண்டதால் தலைமுடி உதிர்வு,காய்ச்சல்,வாந்தி,தலைச்சுற்றல் போன்ற பாதிப்பை ஒரு கிராமமே சந்தித்தது.இதற்கு காரணம் கோதுமையில் நிறைந்திருந்த செலினியம்.இது கோதுமையில் 150 மடங்கு அதிகமாக இருந்ததால் தான் ஹார்மோன் பிரச்சனை ஏற்பட்டு இந்த பாதிப்புகளை மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது.
தற்பொழுது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பிளாஸ்டிக்கில் இருக்கின்ற இரசாயனங்கள் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்துகிறது.அதேபோல் நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகளை உட்கொள்ளுதல்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் ஹார்மோன் சீர்குலைவு உண்டாகிறது.
ஹார்மோன் சீர்குலைவை சரி செய்வது எப்படி?
சிறு தானிய உணவுகளை உட்கொள்வதால் ஹார்மோன் சீர்குலைவு ஏற்படுவது தடுக்கப்படும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் ஹார்மோன் சமநிலை ஏற்படும்.
சுத்திகரிக்கப்படாத உப்பு,உலர் பருப்புகள்,உலர் விதைகள்,ஆர்கானிக் பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை கட்டுப்படுத்தலாம்.
நார்ச்சத்து,தாதுக்கள்,ஆர்கானிக் உணவுகள் மூலம் ஹார்மோன் சீர்குலைவு பிரச்சனையை சரி செய்யலாம்.