மக்களே ஜாக்கிரதை.. இதை செய்தால் கண் பார்வையே போய்விடும்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

மக்களே ஜாக்கிரதை.. இதை செய்தால் கண் பார்வையே போய்விடும்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

நமது இரு கண்கள் உடலில் முக்கிய உறுப்பாக உள்ளது.கண் பார்வையை இழந்தால் இவ்வுலகில் வாழ்வது மிகவும் கடினமாகிவிடும்.இவ்வாறு நமக்கு முக்கியமான உறுப்பாக திகழும் கண்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்து அவசியமாகும்.ஆனால் நாம் அவ்வாறு செய்யதில்லை.இதனால் கண் நமைச்சல்,கண் எரிச்சல்,கண் சூடு,கண் கட்டி,கண் சிவத்தல் போன்ற பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.

கண்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை 

காலையில் எழுந்ததும் சுத்தமான குளிர்ந்த நீர் கொண்டு கண்களை கழுவ வேண்டும்.மின்னணு சாதனங்களை குறைவான வெளிச்த்தில் பயன்படுத்த வேண்டும்.கண்களுக்கு ஓய்வு கொடுக்க நன்றாக உறங்க வேண்டும்.ஆனால் சிலர் கண்களில் தூசு விழுந்தாலோ,அரிப்பு ஏற்பட்டாலோ தொடர்ந்து கண்களை தேய்த்து அதை ஒருவழி செய்து விடுவார்கள்.இவ்வாறு செய்வது கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

கண்களை தேய்க்கும் பொழுது கைகளில் உள்ள கிருமிகள் நேரடியாக கண்களுக்கு சென்று அதை பாதிக்கிறது.கண்களை அடிக்கடி தேய்த்தால் கார்னியா சேதமடைந்து புண்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கண்களில் உள்ள இரத்த ஓட்டம்,நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நிரந்தரமாக கண் பார்வையை இழக்க நேரிடும்.அடிக்கடி கண்களை அழுத்தி தேய்த்தால் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும்.

செய்யக்கூடாதவை:

தொடர்ந்து கண்களை தேய்ப்பதால் அவை இலசிவந்து எரிச்சலை ஏற்படுத்தும்.அது மட்டுமின்றி கண் இமைகளில் தளர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே கண்களில் அரிப்பு ஏற்பட்டால் அழுத்தம் கொடுத்து தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.