மார்பு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதை நெஞ்செரிச்சல் என்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகமாக உற்பத்தியாவதால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
கொழுப்பு உணவுகள்,காரமான உணவுகள்,சர்க்கரை உணவுகள்,சிட்ரஸ் உணவுகள் நெஞ்செரிச்சல் பாதிப்பை அதிகப்படுத்தும்.அதேபோல் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.புகைப்பழக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.
வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.நமது வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் உணவுக் குழாய் பகுதியை நோக்கி வருவதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.நெஞ்செரிச்சல் ஏற்பட முக்கிய காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கமே.செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு வரக்கூடும்.
அல்சர்,இரைப்பை புண்,பித்தப்பை கட்டி போன்ற காரணங்களால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த நெஞ்செரிச்சல் பாதிப்பு நாளடைவில் புற்றுநோய் கட்டியாக உருவாக வாய்ப்பிருக்கிறது.
நெஞ்செரிச்சல் அறிகுறிகள்:
1)உணவு விழுங்குவதில் சிரமம்
2)தொண்டை பகுதியில் வலி உணர்வு
3)தண்ணீர் தாகம் அதிகரிப்பு
4)என்ன உணவு சாப்பிட்டாலும் வயிற்றுப்பகுதியில் எரிச்சல் உணர்வு
நெஞ்செரிச்சல் பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு வரக் கூடாது என்றால் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் நொறுக்கு தீனி,காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.இதனால் நெஞ்செரிச்சல் பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.சாப்பிட்ட உடன் படுத்தால் உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகரித்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.
உங்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு நீண்ட வருடங்களாக இருந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும்.