பீஸ்ட் படத்தின் நடிகை திடீரென மும்பைக்கு பயணம்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன!!

0
188
Beast actress suddenly travels to Mumbai !! What happened at the shooting spot !!
Beast actress suddenly travels to Mumbai !! What happened at the shooting spot !!

பீஸ்ட் படத்தின் நடிகை திடீரென மும்பைக்கு பயணம்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன!!

தளபதி விஜயின்  65 வது படத்தின் பெயர் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. மேலும் தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பிரபல இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நடிகர் விஜய் அவரின் 47 வது பிறந்தநாள் அன்று வெளியிட்டார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.  இதில் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அத்தை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பீஸ்ட் படத்தின் கதாநாயகி நடிகை பூஜா ஹெக்டே வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்குக்காக மும்பைக்கு செல்கிறார். மேலும் விமான நிலையத்தில் அவரை சுற்றி வளைத்த ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வலைதளங்களை பரவி வருகிறது.

Previous articleதமிழகத்தில் இது நடந்தே தீரும்! உறுதிமொழி எடுத்துக்கொண்ட அண்ணாமலை!
Next article10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here