ரஜினியால் தள்ளிப்போன பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு.!!

Photo of author

By Vijay

ரஜினியால் தள்ளிப்போன பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு.!!

Vijay

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் டிசம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங்கை தொடர்ந்து படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பீஸ்ட் படம் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளியன்று பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாக உள்ளதால் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியிடு தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.