பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

Photo of author

By Rupa

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

Rupa

Beast Movie Next Update! Is his daughter going to act!

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

தமிழ் திரையுலகில் ரஜினி ,கமல் அடுத்து இருப்பதும் விஜய் தான்.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் படம் வெளியாகும் போதெல்லாம் இவரது ரசிகர்கள் இவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும்,பட்டாசுகள் வெடித்து பண்டிகை போல கொண்டாடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.ஒரு சில ரசிகர்கள் ,மக்களுக்கு நன்மை தரும் வகையில் உணவுகளை வழங்குதல் , ரத்ததானம் போன்றவற்றை நடத்தி பயனுள்ளதாக செலவழிக்கின்றனர்.அந்தவகையில் கொரோனா காலகட்டம் முதல் அலையில் திரையரங்குகள் ஏதும் திறக்கப்படவில்லை.அது முடிந்த பிறகு  வெளிவந்த பெரிய நடிகரின் படம் என்றால்,அத  மாஸ்டர் தான். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.இவர் முன்பாகவே எடுத்த கைதி படம் பெருமளவு வெற்றியடைந்தது.அதனைப்போலவே இப்படமும் அமைந்தது.

முதல் கொரோனா அலை  காலகட்டம் முடிந்து வெளிவந்த முதல் படம் இது என்பதால் பெருமளவு வசூலை அள்ளியது.இப்படத்தை அடுத்து விஜய் நடிக்க இருப்பது தான்  தளபதி 66 என்ற பீஸ்ட். இப்படத்தை  நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.மேலும் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதையடுத்து ,இது ஆக்ஷன் படமாக இருக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் எண்ணுகின்றனர்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.முதல் முறையாக ஒரு புதிய திருப்பத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார்.அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜயின் மகளாக மகேஷ்பாபுவின் மகளை நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்ப நோக்குடன் துப்பாக்கி படம் போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என கூறுகின்றனர்.