வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை.!! தீபாவளிக்கு அதிரடி ஆஃபர்.!!

0
221

மதுரையில் புதியதாக திறந்த துணிக்கடை ஒன்றில் வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்ததால் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியுள்ளது.

தீபாவளி பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் துணிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக துணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில், திறப்பு விழா சலுகையாக வெறும் ஆறு ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தீபாவளி பண்டிகைக்கு குறைந்த விலையில் துணிகளை எடுக்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஒரே இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்ததால், அங்கு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்ததுடன், தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.

Previous articleசேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்!
Next articleபீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here