கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழகம்…! தூக்கி நிறுத்த துடிக்கும் திமுக…!

0
112

சென்னை கிண்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் போராட்டத்தின் பொழுது அப்போராட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அப்புறம் என்ன அவியலா என்று விமர்சனம் செய்து இருக்கின்றார்.

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகின்றது இந்தப் போராட்டத்தில் பொன்முடி கனிமொழி டி ஆர் பாலு கே என் நேரு உதயநிதி ஸ்டாலின் ஆகிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்றுள்ளனர்.

போராட்டத்தின் போது பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல் அப்புறம் என்னஅவியலா செய்யும் இன்று தெரிவித்திருக்கின்றார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்றி 40 நாட்கள் கடந்த நிலையிலும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது எனவும் இதனை மேலும் மேலும் காலம் தாழ்த்தினால் இந்த சட்ட மசோதாவை அரசு கைவிட்டு விடும் என்று ஆளுநர் மாளிகை நினைக்கின்றது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முதல்வர் ஆளுநரை கேள்வி கேட்காவிட்டாலும் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் கேள்வி கேட்பேன் எனவும் ஜெயலலிதா கருணாநிதி உள்ளிட்ட ஜாம்பவான்கள் உயிருடன் இருந்த வரையில் தமிழ்நாட்டில் இந்த நுழைவுத்தேர்வை கொண்டுவர இயலவில்லை எனவும் ஆனால் இப்போது கேட்பாரற்று இருப்பதால் தேவையற்றவை எல்லாம் தமிழகத்திற்கு வந்து விட்டது எனவும் தெரிவித்திருக்கின்றார்.