அவரை அடியுங்கள் நான் பணம் தருகிறேன்! சீமான் சர்ச்சை பேச்சு!

0
126

தலைநகர் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாகூர் சிதம்பரனாரின் எண்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது நான் செய்தேன் திரைப்படத்தை பார்க்கும் போது வன்னியரை சார்ந்த குறியீடுகள் போன்றவற்றை சரியாக கவனிக்கவில்லை ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக கவிஞர் ஜெயபாஸ்கரன் தான் முதலில் கேள்விகளை எழுப்பினார். உண்மை சம்பவத்தில் தொடர்புடைய அந்தோணிசாமி என்ற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதே போல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக திகழும் இந்த குறியீட்டை எதற்காக நாட்காட்டியில் பயன்படுத்த வேண்டும்?

பொதுவாக நடிகர் சூர்யா கதைதான் கேட்டிருப்பார், ,இதுபோன்ற காட்சிகளையெல்லாம் துணை இயக்குனர் உள்ளிட்டவர்கள் தான் முடிவு செய்வார்கள், ஒருவேளை நான் படத்தை பார்க்கும்போது என்னுடைய கண்ணில் பட்டு இருந்தால் சூர்யாவை தொடர்பு கொண்டு அதனை அகற்றிவிடவேண்டும் என தெரிவித்தரிப்பேன், அவரும் செய்திருப்பார் என கூறியிருக்கிறார் சீமான்.

எனக்கு அண்ணன் சிவக்குமார் குடும்பத்தை நன்றாக தெரியும், அவர்களைப் பொறுத்தவரையில் எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கிறார்கள். தற்சமயம் சுட்டிக்காட்டியவுடன் அந்த நாட்காட்டியில் படத்தை மாற்றியுள்ளார்கள், அத்துடன் பிரச்சினை முடிந்திருக்க வேண்டும்.

குறவர் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தது வன்னியர்கள் தான் அப்படி இருக்க எதற்காக அந்த திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக காட்ட வேண்டும். நீங்கள் ஒரு சமூகத்தின் வலியை வெளிக்காட்ட படம் எடுக்கும்போது மற்றொரு சமூகத்திற்கு எதற்காக வலியை கொடுக்க வேண்டும் அங்கு போராடிய கோவிந்தன் என்பவரை ஏன் படத்தில் இடம்பெற செய்யவில்லை?

எங்களைப் பொறுத்த வரையில் ஜெய் பீம் திரைப்படம் சிறந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடி விட்டது, அதேபோல ஒரு சமூகத்தின் வழியை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய வலியும் நியாயமானதுதான். சூர்யாவை உதைக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது, பதிவிடுவது, உள்ளிட்டவை தேவை இல்லாதது அதை எல்லாம் செய்யக்கூடாது வேண்டுமானால் சூர்யாவை உதைக்க வேண்டும் என்று சொல்லும்வரை நீங்க அடிங்க நான் காசு கொடுக்கிறேன் என்று தெரிவிக்கிறார் சீமான்.

பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ், அதை செயல்படுத்தும் விதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுகின்றது என்று நினைக்க வேண்டாம், நான் அப்படி நினைக்கவில்லை அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து மருத்துவர் ராமதாஸ் விலகுவதாக அறிவித்த பின்னர் எதற்காக அப்படி யோசிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சீமான்.

Previous articleஐயா லீவு விடுங்க! மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த மாணவர்!
Next article141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்!