ஐயா லீவு விடுங்க! மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த மாணவர்!

0
191

 

விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கார்த்திகை தீபத்திற்கு பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா? என்று மாவட்ட ஆட்சியரை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மழையின் அளவு குறைந்தாலும் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது,கனமழை எச்சரிக்கை காரணமாக, ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட்டிருக்கிறது.

மழையின் காரணமாக, ராணிப்பேட்டை, சென்னை,வேலூர்,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, திருவள்ளூர்,அரியலூர்,பெரம்பலூர்,சேலம்,கடலூர்,கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்ற இரண்டு நாட்கள் விடுமுறையிலும் விருதுநகர் மாவட்டம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் ஒருவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியை டேக் செய்து கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படும் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி நாளை உன்னுடைய பெற்றோருடன் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

இணைய பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை கேட்கும் அளவிற்கு மாணவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்தாலும் பையனுக்கு பார்த்து ஏதாவது செய்து விடுங்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வலைதள பிரிவு தற்சமயம் வைரலாகி வருகிறது.

முன்னதாக நவம்பர் மாதம் 17-ஆம் தேதி இரவு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களின் நலன் கருதி 18ஆம் தேதி விடுமுறை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத் ரெட்டியை டேக் செய்து பதிவிட்டுயிருக்கிறார். இதற்கு பதில் தெரிவித்திருக்கின்ற மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறை இல்லை விருதுநகர் மாவட்டத்தில் இரவில்தான் மழை பெய்திருக்கிறது, பகலில் வெயில் அடிக்கிறது, என்று பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு!
Next articleஅவரை அடியுங்கள் நான் பணம் தருகிறேன்! சீமான் சர்ச்சை பேச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here