முடி கொட்டி வழுக்கை ஆகிவிடும் என்ற பயமா? மாதுளை தோலுடன் இதை சேர்த்து பாருங்கள்!

0
332

முடி கொட்டி வழுக்கை ஆகிவிடும் என்ற பயமா? மாதுளை தோலுடன் இதை சேர்த்து பாருங்கள்!

முடி கொட்டு விடும் என்று பயந்து கொண்டு இருக்கிறீர்களா? முடி முழுவதும் கொட்டி வழுக்கையாக விடும் என்று பயமா? பயமே வேண்டாம் மாதுளை தோலுடன் இதை சேர்த்து பாருங்கள் முடி கொட்டவும் கொட்டாது அடர்த்தியாக நன்கு வளரும்.

இதை ஆண்கள் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம். சளி தொந்தரவு இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாமா என்று யோசிக்க வேண்டாம் இதை பயன்படுத்தும் போது சளி தொந்தரவுகள் இருக்காது.

தேவையான பொருட்கள்:

1. வெந்தயம் 1 ஸ்பூன்
2. கருவேப்பிலை இரண்டு கொத்து
3. இஞ்சி ஒரு துண்டு
4. மாதுளை தோல் பொடி
5. வேப்பிலை

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை போட்டுக் கொள்ளவும்.
2. இரண்டு கொத்து கருவேப்பிலையை உருவி அதில் போட்டுக் கொள்ளவும்.
3. இஞ்சி ஒரு துண்டை எடுத்து தோல் நீக்கி நன்றாக நசுக்கி போட்டுக் கொள்ளவும்..
4. இதை அடுப்பில் வைத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும் .
5. இதை இப்பொழுது ஆற வைத்து விடுங்கள்.
6. இப்பொழுது ஒரு பவுலில் மாதுளை பழ தோல் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி இரண்டு ஸ்பூன் அளவிற்கு போட்டுக் கொள்ளுங்கள்.
7. வேப்பிலையை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம் அல்லது வேப்பிலை பொடி நாட்டு மருந்து கடைகளில் வாங்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.
8. இப்பொழுது கொதித்து வைத்திருந்த அந்த தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள்.
9. நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும்.
10. அதை தலை முழுவதும் அனைத்து வேர் கால்களிலும் படும் வரை நன்றாக ஹேர் பேக் போல பூசி கொள்ளவும்.
11. 45 நிமிடம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு தலையை கழுவிக்கொள்ளலாம்.
12. இப்படி வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். நிச்சயமாக உங்களது முடி கொட்டாமல் அடர்த்தியாக முடி வளர ஆரம்பிக்கும்.

Previous articleஐந்து நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு முதுகு வலி இடுப்பு வலி தீர்வு! வீட்டிலே செய்யலாம் உடனே ட்ரை பண்ணுங்க!
Next articleஇதை உரசி பூசினால் ஏழு நாளில் மங்கு நிரந்தரமாக குணமாகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here