பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க

Photo of author

By Anand

பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க

பெண்கள் அனைவருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போது இருக்கும் காலச்சூழலில் முடி யாருக்குமே எதிர்பார்ப்பது போல நீண்டு வளர்வதில்லை.

அதற்கு காரணமாக நாம் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய், உண்ணும் உணவு என எல்லாவற்றிலுமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வதில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சொல்வதென்றால் வளர்வதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் முடி நீண்டு வளர வேண்டுமென்ற ஆசை இருந்தால் இந்த இயற்கை தைலத்தை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தச் சொல்லுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்ப்பது போல முடி நீளமாக வளரும்.

முடி நீளமாக வளர இயற்கைத் தைலம் 

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் பொடி – 10 கிராம்

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

தான்றிக்காய் பொடி – 10 கிராம்

வேப்பிலை பொடி – 10 கிராம்

செம்பருத்தி பூ பொடி – 10 கிராம்

சந்தனப்பொடி – 10 கிராம்

கருவேப்பிலை பொடி – 10 கிராம்

கரிசலாங்கன்னி பொடி – 10 கிராம்

வெட்டிவேர் – 10 கிராம்

ரோஜா இதழ் – 10 கிராம்

மருதாணி பொடி – 10 பொடி

செய்முறை:

மேற்குறிப்பிட்டுள்ள இந்த எல்லா பொடிகளையும் குறித்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு இந்த அனைத்துபொடிகளுடன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, நன்றாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

இவையனைத்தும் நன்றாக காய்ந்ததும் இதை அடுப்பிலிருந்து இறக்கி விட்டு நன்றாக ஆற விடவும்.

பிறகு இதை நல்ல சூரிய ஒளியில் ஒரு வாரத்துக்கு வைத்து எடுக்கவும். அதன்பின் அந்த எண்ணெயை வடிகட்டிப் முடிக்கு பயன்படுத்தவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துவதால் முதலில் முடி உதிர்வது குறையும்.

உடலில் உள்ள சூடு தணியும்.

இளநரை குறையும்.️ பெண்களுக்கு கூந்தல் நீண்டு மிகவும் அடர்த்தியாக வளரும்.