மூக்கின் மீது கண்ணாடி போடற தழும்பு இருக்கா? அதனை போக்க அசத்தலான டிப்ஸ் இதோ!

Photo of author

By CineDesk

மூக்கின் மீது கண்ணாடி போடற தழும்பு இருக்கா? அதனை போக்க அசத்தலான டிப்ஸ் இதோ!
பொதுவாக நம்மில் பலர் கண்ணாடி அணிந்திருப்பார்கள். அதிலும் சிலர் தேவையான நேரத்தில் மட்டுமே கண்ணாடி அணிவர்.ஆனால் வேறு சிலருக்கு எப்போதும் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்கும்.
அந்தவகையில் எப்போதும் கண்ணாடி அணிவதனால் சிலருக்கு மூக்கின் மேல் கருப்பு நிறத்தில் தழும்பும் உண்டாகிவிடும். இது அவர்களின் முகத்தையே அசிங்கமாக்கிவிடும்.அதை போக்க அவர்கள் பல்வேறு கிரீம்களை பயன்படுத்தியும் சரியாகாமல் இருக்கலாம்.
அந்தவகையில் தொடர்ந்து கண்ணாடி அணிவதால் மூக்கில் உண்டாகும் தழும்பைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் சாறு – ஒரு ஸ்பூன்
உருளைக்கிழங்கு சாறு – ஒரு ஸ்பூன்
தக்காளி சாறு – 2 ஸ்பூன்
செய்முறை :
1. வெள்ளரிக்காய் சாற்றை நனறாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
2. இவ்வாறு பிழிந்து எடுத்த இந்த சாற்றில் உருளைக் கிழங்கு மற்றும் தக்காளி சாற்றையும் சேர்க்கவும். பின்னர் இந்த எல்லா சாற்றையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்த சாற்றில் ஒரு காட்டன் பஞ்சை முக்கி எடுக்கவும். அந்த பஞ்சை எடுத்து மூக்கில் உள்ள அந்த தழும்பின் மீது தடவவும்.
4. இந்த சாறு முகத்தில் காயும் வரை அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
5. இவ்வாறே ஒரு வாரம் தொடர்ந்து தினமும் இந்த முறையை பின்பற்றலாம். நிச்சயமாக தழும்பு மறைவதில் ஒரு நல்ல முன்னேற்றத்தை உங்களால் காண முடியும்.