இப்பொழுது வெயில் கொடுமைக்கு அளவே இல்லை. வெயிலில் சென்று முகம் கருத்து விட்டது என கவலை படுகிறீர்களா? கவலை வேண்டாம்! ஒரே வாரத்தில் முகம் மாறி ஜொலிக்க ஆரம்பித்து விடும். அதற்கு வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் போதும்.
அதற்கு தேவையான பொருள் பூசணிக்காய் மட்டுமே. எப்படி பூசணிக்காய் என்று யோசிக்கலாம். . சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளதால் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்வு பெறுகிறது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.
பூசணிக்காயை ஒரு துண்டு எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
நன்கு வெந்ததும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
அதை கண்டெய்னரில் சேமித்து வைத்து கொள்ளலாம். ஒரு வாரம் வரை வரும்.
உங்களுக்கு வறண்ட சருமாமக இருந்தால் பூசணிக்காய் கலவையை 2 ஸ்பூன் எடுத்து, அதில் 2 ஸ்பூன் அளவு தயிர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும் .பின் 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.
உங்களுக்கு எண்ணெய் சருமமாக இருந்தால் பூசணிக்காய் கலவையை 2 ஸ்பூன் எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு Rosewater சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும் .பின் 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.
இதை தொடர்ந்து வாரத்திற்கு 3 முறை பூசி வர சரும நோய், தோல் அரிப்பு , பருக்கள் ஆகியவை குணமாகும்.