அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உட்பட பலமொழிகளில் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனையடுத்து, சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான் உடபட பல நடங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தபோது கேமரா மேன் மாதவன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது சங்கீதா மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு சேனலுக்கு நடிகை சங்கீதா பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘எல்லாமே என் ராசாதான் படத்தில் நான் ராஜ்கிரண் சாருக்கு ஜோடியாக நடிக்கும்போது நான் 10ம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தேன். நான் பெரிய பொண்ணா தெரிய வேண்டும் என்பதற்காக வெயிட் போடச் சொன்னார்கள். அதேபோல் கொஞ்சம் வெயிட் போட்டேன். நான் வெயிட் போட்ட பிறகே படப்பிடிப்பை உறுதி செய்தார்கள். நான் படப்பிடிப்பில் நடிக்கும்போது தினமும் எனக்கு ராஜ்கிரண் அலுவலகத்திலிருந்து சாப்பாடு வரும். நான் நடிப்புக்காக அதிகம் சாப்பிட வேண்டும். அதற்காக நான் அதிகமாவே சாப்பிட்டேன். சில நாட்கள் சாப்பிட முடியாமல் அழுதும் இருக்கிறேன். ஆனால், அந்த படம் என்னை கிராமப்புற மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.