வாக்களித்த அடையாளத்தை காட்டினால் பீர் இலவசம்.. குவியும் வாக்காளர்கள்..!!

Photo of author

By Vijay

வாக்களித்த அடையாளத்தை காட்டினால் பீர் இலவசம்.. குவியும் வாக்காளர்கள்..!!

தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக தமிழகத்தில் நடந்த தேர்தலில் வெயில் மற்றும் வாக்களிப்பதில் விருப்பம் காட்டாததால் குறைவான வாக்குகளே பதிவானது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை.

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தது. இருந்தும் 64% வாக்குகள் மட்டுமே பதிவானது. இதனால் கர்நாடகா உள்ளிட்ட தொகுதிகளில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய ஹோட்டல்கள், பார் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏகப்பட்ட ஆஃபர்களை அள்ளி குவித்துள்ளன.

அதன்படி வாக்கு செலுத்திய மை அடையாளத்துடன் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தால் சுடச்சுட பட்டர் தோசை, நெய் சாதம், பழச்சாறு வழங்கப்படும் என ஹோட்டல் ஒன்று அறிவித்துள்ளது. அதேபோல வொண்டர்லா நிறுவனம் 10 முதல் 15% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதைவிட இளைஞர்களை கவரும் வகையில் ஒரு சிறப்பு ஆஃபர் உள்ளது. அதன்படி ஹட் பீசனஹள்ளியில் அமைந்துள்ள Deck of Brews என்ற தனியார் பார் ஒன்றில் இன்று  (26ஆம் தேதி) நடைபெறும் தேர்தலில் வாக்களித்துவிட்டு, 27ஆம் தேதி வரும் முதல் 50 நபர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த செய்தியை அறிந்த பெங்களூரு மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் 100% வாக்குப்பதிவு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.