மிக சுவையான குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் கேரட் பக்கோடா!

0
71

தேவையான பொருட்கள்:

1. பீட்ரூட் துருவியது

2. கேரட் துருவியது

3. பச்சை மிளகாய்

4. இஞ்சி பூண்டு பேஸ்ட்

5. வெங்காயம் பொடியாக நறுக்கியது.

6. இஞ்சி நறுக்கியது

7. கொத்தமல்லி இலை

8. கறிவேப்பிலை

9. உப்பு

10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்

11. எண்ணெய்

12. கடலை மாவு

13. அரிசி மாவு.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் துருவிய பீட்ரூட் கேரட் சேர்த்துக் கொள்ளவும்.

3. பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கியது, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்துக் பிசைந்து கொள்ளவும்.

4. கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

5. அதில் கடலைமாவு 2 ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

6. அதை பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.

7. அதற்குள் கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. எண்ணெய் காய்ந்த பின் பக்கோடா கலவையை எடுத்து சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஈஸியான கேரட் பீட்ரூட் பக்கோடா தயார். நிமிடத்தில் இந்த பக்கோடாவை தயார் செய்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

author avatar
Kowsalya