ஆண்களே தாது உற்பத்திக்கு இதை தவறாமல் சாப்பிடுங்க!

Photo of author

By Gayathri

ஆண்களே தாது உற்பத்திக்கு இதை தவறாமல் சாப்பிடுங்க!

Gayathri

Updated on:

beetroot juice benefits

ஆண்களே தாது உற்பத்திக்கு இதை தவறாமல் சாப்பிடுங்க!

நாளுக்கு நாள் மக்களின் உணவு பழக்கங்கள் மாறி வருவதால் அவர்களுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.அந்த வகையில் தற்கால இளைஞர்களின் முக்கிய பிரச்சனை திருமணமாகியும் குழந்தையில்லாமல் இருப்பது.

திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆண்களின் உயிரணுக்கள் குறைந்துள்ளது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.உயிரணுக்கள் குறைப்பாட்டுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் தற்போதைய உணவு பழக்க வழக்கங்களும் காரணமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் நாம் உண்ணும் உணவில் உள்ளதை வைத்தே தாது உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம். ஆம் இதை படித்த பிறகு பீட்ரூட் புடிக்காதுனு சொல்லுறவங்க கூட இனி இதை சாப்பிட ஆரம்பிச்சிருவிங்க

பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பதால் இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக கிடைக்கும். ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸ். ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்களுக்கு ஆண்மை பிரச்சனை வராமல் தடுக்கும்.

இதுமட்டுமல்லாமல் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் நீங்கி உடல் சுத்தமாகும்.

அடிக்கடி பீட்ரூட் சாப்பிட்டு வர கல்லீரல் சம்மந்த பிரச்சனைகள் நீங்கும்.

புற்றுநோய் வருவதை தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும்.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், நம் உடலில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தின் அளவை அதிகாரிக்க செய்கிறது.

குறிப்பாக சர்க்கரைநோயாளிகள் பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது.