ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்! 

0
197

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்!

 

தேவையான பொருட்கள் : பீட்ரூட் கால் கிலோ, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு ,கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு.

செய்முறை :முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து தண்ணீர் அதிகம் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வெங்காயத்தை பொடியாகவும், பீட்ரூட்டை துருவியும் வைத்து கொள்ள வேண்டும்.பிறகு துருவிய பீட்ரூட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கடலை பருப்பு விழுது, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கலந்த உடனே சிறு உருண்டைகளாக உருட்டி, பின் வடை போல் தட்ட வேண்டும்.பிறகு எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான பீட்ரூட் வடை தயாராகிவிடும்.

 

Previous articleஅடுத்தவர் மீது பழி சுமத்துவதால் உண்டாகும் கர்மவினை பலன்! ஆன்மீகக் கதை!
Next articleஎதிரிகள் தொல்லைகளில் இருந்து உங்களை பாதுகாக்க ஒரு ரகசியம்! நீங்களும் இதை பயன்படுத்துங்கள்!