உதடு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாம்! இதை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி!!

0
116
#image_title
உதடு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாம்! இதை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி
பெண்களுக்கு ஏற்படும் உதடு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாமை வீட்டிலேயே எவ்வாறு எளிமையாக செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களில் சிலருடைய உதடுகள் சிவப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு உடலில் சத்து குறைபாடு காரணமாக உதடு கருமையாக மாறும் இதை சரி செய்ய இந்த பதிவில் எளிமையாக பீட்ரூட் பாம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பீட்ரூட் பாம் செய்ய தேவையான பொருட்கள்…
* பீட்ரூட்
* விட்டமின் இ கேப்சியூல்
* ஷியா பட்டர்
* தேன் மெழுகு
செய்முறை…
முதலில் பீட்ரூட்டை துருவி அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி சூடு செய்ய வேண்டும். பின்னர் அதற்குள் மற்றொரு பாத்திரம் வைத்து தேன் மெழுகு மற்றும் ஷியா பட்டர் இரண்டையும் உருக்க வேண்டும்.
உருகிய இந்த ஷியா பட்டர், தேன் மெழுகுடன் இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு விட்டமின் கேப்சியூல் உடைத்து சேர்க்க வேண்டும்.
இறுதியாக இதை ஒரு சிறிய லிப் பாம் பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கலாம். அரைமணி நேரத்தில் இந்த கலவை நன்கு செட்டாகி விடும். அதன் பிறகு இந்த லிப் பாமை உதடுகளுக்கு பயன்படுத்தலாம்.