பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Divya

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பேரீச்சம் பழத்தில் இரும்பு,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் குணமாகும்.
பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
1)உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெற முடியும்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
2)இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பட தினமும் இரண்டு பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.
3)மூளை ஆரோக்கியம் மேம்பட பேரீச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேரீச்சம் பழம் உட்கொள்ளலாம்.
4)சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாக பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.முடி வளர்ச்சியை அதிகரிக்க பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.
5)செரிமான ஆரோக்கியம் மேம்பட பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்க தினமும் பேரிச்சை சாப்பிடலாம்.
6)எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்க தேனில் ஊறவைத்த பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.
பேரீச்சை தீமைகள்:
1)அளவிற்கு அதிகமாக பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.
2)ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தவிர்க்க வேண்டும்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தவிர்ப்பது நல்லது.
செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் அதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.