“பிச்சைக்காரன் 2” ரீலிஸ் எப்போது? விஜய் ஆண்டனி புதிய தகவல்!!

Photo of author

By Parthipan K

“பிச்சைக்காரன் 2” ரீலிஸ் எப்போது? விஜய் ஆண்டனி புதிய தகவல்

சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன் 1” படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது, மேலும் இயக்குனர் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் “பிச்சைக்காரன் 2” படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, தற்போது புதிய அறிவிப்பை ஒன்றை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகரும் இயக்குனருமான விஜய் ஆண்டனி, அதில் “நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடில பேய் ஒன்னு படுத்துருக்கத பாத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த “பிச்சைக்காரன் 2” திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் சில காரணக்களால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் படக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் வரும் மே மாதம் 19ஆம் தேதி “பிச்சைக்காரன் 2” திரைப்படம் ரீலிஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ரசிகர்களும் பொதுமக்களும் திரையரங்குகளில் சென்று பார்க்கும் படி கோரிக்கையை வைத்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.