நம்புங்க.. இந்த ட்ரிங்க் குடித்தால் வாழ்நாளில் நரம்பு தளர்ச்சி பாதிப்பையே பார்க்கமாட்டீங்க!!

Photo of author

By Divya

நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை உருவாகும்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஆண்,பெண் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:

1)பதட்டம்
2)அதிகமாக வியர்த்தல்
3)மன அழுத்தம்
4)தலைவலி
5)உடல் தசை பலவீனம்
6)நரம்பு வலி

நரம்பு தளர்ச்சியில் இருந்து மீள்வதற்கான வீட்டு வைத்தியங்கள்:

தீர்வு 01:

சேப்பங்கிழங்கு
புளி

முதலில் ஒரு சேப்பங்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை புளி கரைசலில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த சேப்பக்கிழங்கை வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தீர்வு 02:

ஜாதிக்காய்
தேன்

முதலில் இரண்டு ஜாதிக்காயை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இரவு நேரத்தில் கால் டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியில் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.

தீர்வு 03:

இலவங்கப்பட்டை
தேன்

முதலில் நான்கு இலவங்கப்பட்டையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பட்டை தூளை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இலவங்கப்பட்டை பொடி கால் தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தீர்வு 04:

துளசி விதை
தேன்

முதலில் துளசி விதைகளை அரைத்து தூளாக்கி ஒரு கிளாஸ் சூடான நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தீர்வு 05:

அமுக்கிரா கிழங்கு
தேன்
பேரிச்சம் பழம்

முதலில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அமுக்கிரா கிழங்கை வாங்கி வந்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த அமுக்கிரா கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள பேரிச்சம் பழத் துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.