குடலில் தேங்கிய மலக் கழிவுகள் முழுமையாக வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்:
**நீர்ச்சத்து குறைபாடு
**கெட்டி மலம்
**வறண்ட மலம்
**செரிமானக் கோளாறு
**மலம் அடக்கி வைத்தல்
மலச்சிக்கலுக்கு சிம்பிள் தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)கடுக்காய் பொடி
2)தான்றிக்காய் பொடி
3)நெல்லிக்காய் பொடி
செய்முறை விளக்கம்:-
கடுக்காய்,தான்றிக்காய்,நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் வற்றல் பதத்தில் 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒருமுறை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த பொடி கால் தேக்கரண்டி அளவு போட்டு காய்ச்சி குடித்து வந்தால் மலக் கழிவுகள் சீக்கிரம் வெளியேறும்.
நெல்லிக்காய்,தான்றிக்காய்,கடுக்காய் ஆகிய மூன்றும் கலந்து திரிபலா சூரணமாக நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது.பொடி செய்ய முடியாதவர்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம்.
இந்த பொடி குடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்துகிறது.இதை மாதம் இருமுறை மலமிளக்கியாக பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஒம்ம
2)பட்டை
3)வெந்தயம்
4)பெருஞ்சீரகம்
செய்முறை விளக்கம்:-
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி ஓமம்,ஒரு துண்டு பட்டை,அரை தேக்கரண்டி வெந்தயம் மற்றும் கால் தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு வறுக்க வேண்டும்.
அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் குடலில் இருக்கின்ற கழிவுகள் முழுமையாக அகலும்.