பழங்களில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழம் என்றால் அது திராட்சைதான்.இந்த திராட்சையில் இருக்கின்ற சதைப்பற்று மற்றும் விதைகள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.பச்சை திராட்சையைவிட கருப்பு திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
கருப்பு திராட்சை பழத்தை சாப்பிடும் பொழுது அதன் விதைகளை தூக்கி எறிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மையில் கருப்பு திராட்சை விதையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.திராட்சை விதையில் உள்ள சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.
திராட்சை விதையை பொடித்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் ஈ சத்து கிடைக்கும்.இரத்த கொழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை விதையை பொடித்து தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
இரத்தக் குழாய் வீக்கம் இருப்பவர்கள் திராட்சை விதையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.மூல நோய் பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை விதையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரத்தக் குழாயில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகளை கரைக்க திராட்சை விதையை சாப்பிடலாம்.மாலைக்கண் நோய் இருப்பவர்கள் திராட்சை விதையை வறுத்து பொடித்து சாப்பிடலாம்.தசை வலிமையை அதிகரிக்க திராட்சை விதை உட்கொள்ளலாம்.
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக திராட்சை விதையை சாப்பிடலாம்.கண் புரை குணமாக திராட்சை விதை உட்கொள்ளலாம்.மூளை செயல்திறனை மேம்படுத்த திராட்சை விதையை வறுத்து சாப்பிடலாம்.
கால் மரத்து போதல் பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை விதையை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக திராட்சை விதையை பவுடராக்கி வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.