நமது குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற சௌ சௌ கொண்டு சுவையான ஜூஸ் செய்து குடிங்க.
சௌ சௌ அத்தியாவசிய சத்துக்கள்:
**வைட்டமின் சி,கே
**மெக்னீசியம்
**மாங்கனீசு
**நார்ச்சத்து
**பொட்டாசியம்
**இரும்பு
**துத்தநாகம்
**சோடியம்
சௌ சௌ ஊட்டச்சத்துக்கள்:
*உடல் எடை குறைய அடிக்கடி சௌ சௌ சாப்பிடலாம்.
*உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக சௌ சௌ சாப்பிடலாம்.
*இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை குணமாக சௌ சௌ உட்கொள்ளலாம்.
*சிறுநீரக கற்களை கரைக்க சௌ சௌ சாப்பிடலாம்.
*சரும ஆரோக்கியம் மேம்பட சௌ சௌ உட்கொள்ளலாம்.
*கெட்ட கொழுப்பை கரைக்க சௌ சௌ சாப்பிடலாம்.
*குடல் கழிவுகளை அகற்றும் சௌ சௌ பானம்:
தேவையான பொருட்கள்:-
1)ஒரு சௌ சௌ
2)ஒரு தேக்கரண்டி சீரகம்
3)ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு சௌ சௌவை தண்ணீரில் கழுவிவிட்டு அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.பின்னர் இந்த சௌ சௌ ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.அதேபோல் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இவை இரண்டையும் உரலில் போட்டு தட்டி சௌ சௌ ஜூஸில் கலந்து குடித்தால் குடல் சுத்தமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஒரு சௌ சௌ
2)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
3)ஒரு கிளாஸ் தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
சௌ சௌவை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதை ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பானத்தை வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.