பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டி மற்றும் கருப்பை சார்ந்த பாதிப்புகள் குணமாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூலிகை வைத்தியத்தை பின்பற்றலாம்.
1)தண்ணீர் விட்டான் கிழங்கு
இது ஒரு ஆயுர்வேத மூலிகையாகும்.இந்த தண்ணீர் விட்டான் கிழங்கை சதாவரி என்றும் அழைப்பார்கள்.இந்த கிழங்கை பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கட்டிகள் குணமாகும்.
சரியாக மாதவிடாய் வராத பெண்கள் இந்த சதாவரி மூலிகையை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த மூலிகை ஆண்களின் மலட்டு தன்மையை போக்க உதவுகிறது.
2)மலைவேம்பு
பெண்களின் கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கும் அருமருந்தாக மலைவேம்பு திகழ்கிறது.இந்த மலைவேம்பை அரைத்து உருண்டையாக பிடித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பை கட்டிகள் கரைந்துவிடும்.மலைவேம்பு கசாயத்தை குடித்து வந்தால் கருப்பையில் இருக்கின்ற அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.
3)அதிமதுரம்
நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் கிடைக்கும்.இதை பொடியாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் அதில் சிறிது அதிமதுரப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.இப்படி செய்தால் கருப்பை கட்டி குணமாகும்.
4)கிராம்பு பட்டை மற்றும் மிளகு
பாத்திரம் ஒன்றில் இரண்டு கிராம்பு,ஒரு துண்டு பட்டை மற்றும் நான்கு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து குடித்து வந்தால் கருப்பை கழிவுகள் வெளியேறும்.மாதவிடாய் கோளாறு முற்றிலும் குணமாகும்.
5)சுக்கு மிளகு மற்றும் திப்பிலி
பாத்திரம் ஒன்றில் ஒரு துண்டு சுக்கு,பத்து மிளகு மற்றும் ஒரு திப்பிலி போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பானம் நன்கு கொதித்து சுண்டி வந்த பின்னர் கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.