31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு!

0
259

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு!

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக கேப்டனாக இருந்த ஜோ ரூட்டின் தலைமையில் விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து ஸ்டோக்ஸ் கேப்டன் பதவியேற்று, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 31 வயதாகும் ஸ்டோக்ஸ் இதுவரை 103 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சம்மந்தமாக ஸ்டோக்ஸ் இன்று CB வெளியீட்டில் ஸ்டோக்ஸ் கூறுகையில், “செவ்வாய்கிழமை டர்ஹாமில் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுவேன். “நான் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது தோழர்களுடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன். வழியில் நாங்கள் நம்பமுடியாத பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.

Previous articleபீனிக்ஸ் பறவை போல் எழுந்து வரும் தனுஷ்! அதற்கு இந்த ஐந்து படங்கள் தான் காரணமா?
Next articleதினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!