தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

0
64

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையான உடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக ஒவ்வொருவரும் தினசரி செய்ய வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, தூக்கத்தைப் போக்க ஆரோக்கியமற்ற காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடிப்போம். ஆனால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தூக்கம் கலைந்துவிடும் என்பது தெரியாது. மேலும்

ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 20-25 நிமிடம் ஓடினால் கட்டாயம், ஆரோக்கியமான வழியில் 1 கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். மேலும்

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கணும் என்றால் அப்ப தினமும் இத்தனை பேரிச்சம்பழம் சாப்பிடுங்க மேலும்

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து அன்றைய தினத்தை ஆரம்பித்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடனும், ஸ்மார்ட்டாகவும் செயல்பட முடியும்.

மேலும் உங்க இரத்த அழுத்தத்தை குறைக்க தினமும் 5 டம்ளர் தண்ணீர் குடிச்சா போதும்.

புகைப்பிடிப்பவர்கள் தினமும் பால் டீக்கு பதிலாக, ப்ளாக் டீ குடித்து வந்தால், நுரையீரல் பாதிக்கப்படுவதை ஓரளவு தடுக்கலாம். எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

தூங்கும் முன் உடற்பயிற்சியை செய்தால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும். மேலும்

ஆய்வு ஒன்றில், வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்கள், ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவர்களை விட சில வருடங்கள் அதிகமாக வாழ்வதாக தெரிய வந்துள்ளது. எனவே ஹோட்டலில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும்

மேலும் காலையில் எழுந்ததும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு காப்ஃபைன் நிறைந்த காபி அல்லது டீ குடிப்பதை விட, குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பது மிகவும் சிறந்தது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவர் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தினமும் 7-8 மணிநேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

தினசரி இது போன்ற செயல்முறைகளை செய்து வந்தாலே போதுமானது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

 

author avatar
Parthipan K