பி எம் கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களா? இன்றே இறுதி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது?
மத்திய அரசு தற்போது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றது. அந்த நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவியும் வழங்கி வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணை வீதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலும், இரண்டாவது தவனை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலும், மூன்றாவது தவணையை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பெற்று வருகின்றனர்.
தற்போது வரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 13வது தவனை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இந்த தவணை ஹோலி பண்டிகைக்கு முன்பாகவே வங்கி கணக்கிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் பயனடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்கு இன்றே கடைசி நாள் அவ்வாறு செய்யவில்லை என்றால் விவசாயிகளுக்கு பணம் கிடைக்காது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.