மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்! 

0
361
#image_title

மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்! 

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக விசாரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கல்லூரி முதல்வரே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் வெளிவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.   பல்கலைக்கழக விடுதியில் கடந்த   3-ஆம் தேதி, 17 வயது மாணவி ஒருவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் போலீசுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மாணவியின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள் தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் விடுதியில் உள்ள  மாணவிகளிடமும், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தோழிகளிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பெரும் திருப்பமாக திடுக்கிடும் அதிர்ச்சி  தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகத்தில் முதல்வராகவும், மாணவி உயிரிழந்த விடுதியின் வார்டனாகவும் இருந்தவர் ரமேஷ். இவர் கல்லூரியில் பயிலும் சில மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது  விசாரணையில் தெரியவந்தது.

மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பலமுறை தனது அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக ரமேஷ் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வேறு கல்லூரிக்கு மாறப் போவதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரமேஷ் மாணவி வேறு கல்லூரிக்கு சென்றால் நாம் மாட்டிக் கொள்வோம் என அச்சமடைந்துள்ளார்.

சம்பவத்தன்று மாணவியை தனது அறைக்கு அழைத்து பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த ரமேஷ் அவரைக் கொன்று தூக்கில் தொங்கியது போல் செட்டப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்த மறுகணமே ரமேஷை தேடி தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில் அவரது செல்போன் சிக்னலை வைத்து பிஜப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த ரமேஷை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் ரமேஷ் இடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வேறு  யாரேனும் மாணவிகள் அவரிடம் சிக்கி பாதிப்படைந்து உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

17 வயது கல்லூரி மாணவியை முதல்வரும் மாணவிகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த விடுதி காப்பாளருமான ரமேஷ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!
Next articleபி எம் கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களா? இன்றே இறுதி நாள் முந்துங்கள்  இல்லையெனில் பணம் கிடையாது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here