தம்பதிகள் இந்த நேரத்தில் உறவு வைத்து கொண்டால் இவ்வளவு பலன்களா?
திருமணமான தம்பதிகள் அனைருக்கும் உடலுறவு குறித்து பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுவதுண்டு.அதில் குறிப்பாக எந்த நேரத்தில் உறவு வைத்துக் கொண்டால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என பலர் மனதில் சந்தேகம் எழுந்திருக்கும்.
அந்தவகையில் ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை தொடர்பான அமைப்பு ஒன்று உடலுறவு சம்மந்தமாக நடத்திய ஆய்வில் பலரும் வியக்கும் வகையில் ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தது. குறிப்பாக அந்த ஆய்வில் கலந்து கொண்ட நபர்களில் பலரும் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், அவர்களுடைய மன அழுத்த அளவு குறைவதாகவும், அவர்கள் அன்றைய நாளை நல்ல விதமாகவும், புத்துணர்ச்சியுடனும் தொடங்க முடிகிறது என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலையில் 7.30 மணி அளவில் தம்பதிகள் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்த நாள் முழுவதும் அவர்களால் உற்சாகமாக இருக்க முடிகிறது என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன. அதுமட்டுமல்லாமல் நெருக்கடியான வேலைகளான மார்க்கெட்டிங் உள்ளிட்ட வேலைகளில் பணிபுரிபவர்கள் கூட, அதிகாலை 7.30 மணி அளவில் உடலுறவு வைத்துக் கொள்வதால் அவர்களால் உற்சாகம் குறையாமலும், சிரித்த முகத்துடனும் வேலை செய்ய முடிவதாக அந்த ஆய்வில் கூறுகின்றனர்.
அறிவியல் பூர்வமாக காலை 7.30 மணி என்பது ஆண்களின் டெஸ்டிரோன் அளவானது அதிகமாக சுரக்கும் நேரம். அதனால் தான் இந்த நேரத்தில் தம்பதிகள் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும். மற்ற எல்லா நேரங்களையும் விட இந்த நேரத்தில் தான் ஆண்களின் டெஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கிறது. எனவே இது தான் உடலுறவு வைத்துக்கொள்ள சரியான நேரமாகும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த காலை 7.30 மணி என்பது தான் தம்பதிகள் உடலுறவு வைத்துக் கொள்ள மிகவும் சரியான நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் ஆண் பெண் என இருவருக்கும் ஹார்மோன்கள் நன்றாக செயல்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் தான் உடலுறவு சம்பந்தமான பல சமிக்கைகள் எழுச்சியடைகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
என்னடா இது காலை 7.30 மணியா? இது நான் உடற்பயிற்சி செய்யும் நேரம், நான் சமையல் செய்யும் நேரம் என்றெல்லாம் யோசிக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அனைத்து வேலைகளையும் மிகவும் திறமையுடன், முன்பை விட மிக அதிக கவனத்துடன் செய்ய முடியும் என்பது முற்றிலும் உண்மையானதாகும்.
ஒவ்வொருவரும் காலையில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தை உடலுறவுக்காக ஒதுக்கலாம். ஏனெனில் காலையில் நடக்கும் உடலுறவின் மூலமாக நீங்கள் உங்களது உடலமைப்பை நன்றாக பாதுகாக்க முடியும். இதனால் நீங்கள் சரியான உடலமைப்புடன் இருக்க முடிகிறது. அதுமட்டுமின்றி உங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இவ்வாறு நீங்கள் உங்களது மனைவியுடன் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், ரொமேண்டிக் கணவர் என்ற பட்டத்தை பெற முடியும் என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.