சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

0
154

சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

அஞ்சரை பெட்டியில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் என்றால் அது சீரகத்தை சொல்லலாம்.
பெரும்பாலானோர்,சீரகத்தை சாதாரணமாகவே வாயில் போட்டு மெல்லுவர்.இந்த சீரகத்திற்கு நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றும் தன்மை உள்ளது.சீரகத்தை உணவில் சேர்ப்பதை விட அதன் தண்ணீரை குடித்தால் அது நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.சீரகத் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துக்கொள்ளலாம்!

சீரகக் தண்ணீர் தயாரிக்கும் முறை!

3 டீஸ்பூன் சீரகத்தை எடுத்து 200ml நீரில் போட்டு அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அதனை அப்படியே சிறிது நேரம் ஆற வைத்து விடவேண்டும்.இந்த சீரகத் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சீரகத் தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்!

சர்க்கரை நோய்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்தி,உடலில் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமன்செய்து நீரிழிவு நோயை முற்றிலும் கட்டுப்படுத்துகின்றது.

மாதவிடாய் வயிற்று வலி

மாதவிடாய் நேரத்தில் கடுமையான வயிற்று வலியின் பொழுது,மேலே சொன்னது போல் சீரகத் தண்ணீரை வைத்து நாம் குடித்தால்,15 நிமிடங்களில் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.வயிற்றுவலி மட்டுமல்லாது இடுப்பு வலி,மாதவிடாயின் போது கை கால்கள் சோர்ந்து போதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக பயன்படுகின்றது.

சுவாசக் கோளாறு

சீரகத்திருக்கு நுரையீரலில் உள்ள சளியை முற்றிலும் அகற்றும் சக்தி உள்ளது.இதுமட்டுமின்றி சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள்,ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து வந்தால்,இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் மீண்டு எழலாம்.

இதுமட்டுமின்றி நெஞ்சுசளி,மற்றும் நாள்பட்ட சளி பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இந்த சீரக தண்ணீர் பயன்படுகின்றது.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

வயிற்று வலி மற்றும் அடி வயிற்று வலி பிரச்சினைக்கு நல்ல தீர்வாகும்.இதுமட்டுமின்றி ஜீரக தண்ணீர் செரிமான நொதிகளை சுரக்க செய்து,செரிமானத்தை தூண்டுகிறது.நீங்கள் எப்பேர்பட்ட கடினமான உணவை சாப்பிட்டாலும் சிறிதளவு சீரகத் தண்ணீர் அல்லது சீரகத்தை வாயில் போட்டு மென்றால், எளிதியில் உணவானது ஜீரணமடைந்து விடும்.இதுமட்டுமின்றி வயிற்றுப்போக்கின் போது சிறிதளவு சீரகம் மற்றும் ஓமத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை எடுத்து குடித்தால் வயிற்றுப்போக்கு உடனே நின்று விடும்.

தாய்ப்பால் மற்றும் கர்ப்பிணி பெண்களின் வாந்தி பிரச்சினை

சீரகத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.பிரசவித்த தாய்மார்கள்,இந்த சீரகத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தாய்ப்பால் இல்லாத தாய்மார்களுக்கும் அதிக அளவில் தாய்ப்பால் சுரக்கும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க,சீரக தண்ணீருடன் சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை பிளிந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.உடல் சோர்வும் நீங்கும்.

உடல் எடை குறைக்க

வாழைப்பழத்துடன் சிறிதளவு சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்,ஒரே மாதத்தில் வயிற்று தொப்பையை குறைத்து விடும்.

தலைசுற்றல் பிரச்சனை

ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைசுற்றல் ஏற்படும்.அவர்கள் எப்பொழுதுமே,மிட்டாய் போன்ற பொருட்களை கைவசம் வைத்திருப்பர்.தலை சுற்றும் போது சீரகத்தை மென்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் குடிக்கும் பொழுது தலைசுற்றுதல் உடனடியாக நின்றுவிடும்.

 

 

 

 

author avatar
Pavithra