பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலன்கள்!! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசானது தினம் தோறும் ஏராளமான புது புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அதிக அளவில் சலுகைகளையும் கொடுத்து வருகிறது.
அந்த வகையில், மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது ஒரு முதலீடு வழங்கும் திட்டம் ஆகும்.
மேலும், இது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக முதலீட்டாளார்கள் பல மடங்கு லாபத்தை அடையலாம். இந்த திட்டத்தில் மூன்று வகையான நன்மைகள் உள்ளது.
இதன் மூலம் வரி சேமிப்பு நன்மை வழங்கப்பட்டு, வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், பிபிஎப் முதலீட்டில் உள்ள வருமான வரி சட்டம் 80 C என்ற பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
இந்த பொது வருமான வைப்பு நிதி திட்டத்தில் மொத்தம் பதினைந்து ஆண்டுகள் லாகின் வசதி உள்ளது. இது ஆண்டுகள் முழுவதும் நிறைவடைந்த பிறகுதான் இதற்கான முதிர்வு தொகை பயனாளர்களின் கைக்கு கிடைக்கும்.
இதில் ஐநூறு ரூபாய் சேமித்து வைத்து வர ஒரு வருடத்திற்கு மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் 7.1 சதவிகிதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்த திட்டம், உத்திரவாதத்தின் மூலமாக வருமானத்தை வழங்குவது தவிர முதலீடு செய்யப்பட்ட முழு பண மதிப்பிற்கும் விலக்கை அளிக்கின்றது. இதனால் அனைவரும் பயன் பெறுவார்கள் என்று எண்ணப்படுகிறது.