பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பீட்ரூட் இதில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காண்போம்
தற்போதுள்ள காலகட்டத்தில் மிக விரைவாக செய்யக்கூடிய உணவுகளை நாம் அதிகம் உண்கிறோம் அதனால் நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்து நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் உள்ள சத்துக்களை நாம் கண்டு கொள்வதில்லை அதனை இந்த பதிவின் மூலமாக காண்போம்.
பீட்ரூட்டில் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் விட்டமின்கள் உள்ளது. இவை உடல் பிரச்சினை மற்றும் மன ரீதியாகவும் நம்மளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. தற்போதுள்ள சூழலில் மனரீதியான பிரச்சனைகள் அதாவது மன அழுத்தம் என்பது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.
இதனை சரி செய்வதற்கு நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் அதிகமாக பீட்ரூட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் உள்ள பிடைன் என்கின்ற பொருள் மூளையில் உள்ள நரம்புகளை தளர்த்தி நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. ரத்த சோகை பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய உணவுகளுடன் பீட் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பீட்ரூட் அதிகம் சாப்பிட்டு வருவதன் மூலமாக ரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது மற்றும் பீட்ரூட்டில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது அதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தூக்கமின்மையால் அவதிப்பட கூடியவர்கள் பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதன் மூலமாக பீட்ரூட்டில் உள்ள வேதிப்பொருள் நரம்புகளை தரர்த்தி உறக்கமின்மையை போக்குகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கின்றது மற்றும் பீட்ரூட் அதிகம் சாப்பிடக் கூடியவர்கள் ரத்த கொதிப்பு இருந்தால் அதனை சமன் செய்ய உதவுகிறது.
இதய அடைப்பு அல்லது இதய கோளாறு உள்ளவர்கள் பீட்ரூட் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலமாக ரத்த ஓட்டத்தை சமன் செய்கிறது இதன் காரணமாக ரத்த அடைப்பு குறைகிறது.