துளசியுடன் பால் கலந்து குடிக்கும் பொழுது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.
முதலில் துளசி பால் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.
1. ஒரு கைப்பிடி அளவு துளசியைச் எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
2. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
3. பின் அதில் துளசி இலைகளைப் போட்டு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.
4. அடுப்பை அணைத்துவிட்டு பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
5. துளசி பால் தயார்.
6. இதைத் தேனுடன் கலந்து குடிக்கலாம்.
இந்த துளசி பாலில் உள்ள நன்மைகள் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
இப்பொழுது அது தரும் பயன்களை பார்க்கலாம்.
1. துளசியில் அதிகமாக ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளதால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. மேலும் இதயம் சீராக செயல்பட உதவுகிறது. இதயம் நன்கு செயல்பட ஆக்சிசன் ஏற்றத்தை மேம்படுத்துகிறது. இதயத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது.
2. துளசி பால் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு மழை காலங்களில் ஏற்படும் சளி இருமலுக்கு மருந்தாகிறது. துளசி பால் அருந்துவதால் தொண்டை புண், தொண்டை கரகரப்பு, இருமல், சளி ஆகியவை குணமாகும். மேலும் ஆஸ்துமா உள்ளவர்கள் துளசி பாலை தினமும் குடித்து வரும் பொழுது நல்ல தீர்வு கிடைக்கும்.
3. துளசி பால் மூளைக்கு ஓய்வு தந்து, மன அழுத்தத்தை குறைத்து, நரம்பு மண்டலத்தை சீராக்கி ஓய்வு பெற செய்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.
4. ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட துளசிச் பாலை ஒரு டம்ளர் வெதுவெதுப்பாக காலையில் அருந்தலாம்.
5. ஒரு டம்ளர் துளசிபாலை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடி புற்று நோயை விரைவில் குணமடையச் செய்கிறது.
6. துளசி பால் ஒரு நல்ல சிறுநீர்ப் பெருக்கியாக காணப்படுகிறது. இது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றி சிறுநீரக நோய்களை தடுக்கிறது. மேலும் சிறுநீரக கற்களை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றுகிறது.
இவ்வளவு நன்மை தரும் துளசி பாலை தினமும் குடியுங்கள். வாழ்வில் புத்துணர்ச்சியுடன் எந்த நோய் இன்றி சந்தோஷமாக வாழுங்கள்.