நடைபயிற்சி பயன்கள்: தினமும் 30 நிமிடங்கள் நடந்தால்.. ஹாஸ்பிடல் செலவு வராது!!
தினமும் நம் உடலுக்கு வேண்டிய ஆரோக்கிய செயல்களை செய்வது அவசியம்.காலையில் எழுந்ததும் நடப்பது,ஓடுவது,தியானம் மற்றும் யோகா செய்வது,உடற்பயிற்சி செய்வது போன்ற பழக்கங்களை தவறாமல் செய்து வந்தால் நீண்ட வருடங்களுக்கு நோயின்றி வாழலாம்.
உடல் எடையை குறைக்க முடியாமல் அவதியடைந்து வரும் நபர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாக இருக்கும்.காலை,மாலை இருவேளையும் 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்து வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
தினமும் நடப்பதினால் மூட்டுகளில் உள்ள ஜவ்வின் அளவு அதிகரித்து மூட்டுவலி வராமல் இருக்கும்.தினமும் நடப்பதினால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரைந்து வியர்வை வழியாக வெளியேறி விடும்.
நடைபயிற்சி செய்வதால் உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும்.இதனால் உடலில் இருக்கின்ற அதிகளவு உப்பு வியர்வை மூலம் வெளியேறி விடும்.
நடைபயிற்சி மேற்கொள்வதால் கால்களுக்கு வலு கிடைக்கிறது.இதனால் கால் வலி,பாத வலி,வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நடைபயிற்சி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் வரமால் இருக்க நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி உதவுகிறது.எனவே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் குறைந்து 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.