அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்!

Photo of author

By Kowsalya

அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்!

1.உடல் சூடு குறைய முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் படிப்படியாக குறையும் , மலச்சிக்கல் நீங்கும்.
2. உடம்பு வலி போக முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் வலி பறந்து போய் விடும்.
3.ரத்தம் ஊற முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும்.
4.மேலும் பல் உறுதிக்கு, நரை முடிக்கு, நீளமான முடியின் வளர்ச்சிக்கு, தோல் நோய், வயிற்றுப் புண், வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரையை உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
5. தாய்ப்பால் சுரக்க முருங்கைக் கீரை ஒரு மிகப்பெரிய அருமருந்தாக பயன்படுகிறது. தாய்மார்கள் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
6.ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறு நீங்க முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.
7.மலட்டுத்தன்மையை போக்க ஆண், பெண் இருபாலரும் முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.

முருங்கைக் காய்

1.சிறுநீரகத்தை பாதுகாப்பதில் முருங்கைக்காய்க்கு அற்புதமான சக்தி உண்டு.
2.முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
3.கர்ப்பப்பையின் குறைகளை போக்கி, கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கிறது.
வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடையும்.

4. முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வர காய்ச்சல், மூட்டு வலி குணமாகும்.

இவ்வாறு எண்ணற்ற பலன்கள் முருங்கை கீரை மற்றும் காய்களில் உள்ளது.