தீக்காயத்திற்கு சிறந்த முதலுதவி!! விரைவில் புண் ஆற.. தழும்புகள் பதியாமல் இருக்க இதை செய்யுங்க!!

Photo of author

By Divya

நம் அன்றாட வாழ்வில் சில எதிர்பாராத தருணங்களில் காயங்கள்,தீக்காயங்கள் போன்றவை ஏற்படுகிறது.குறிப்பாக சமையல் செய்யும் பொழுது தீக்காயங்கள் படுதல்,சுட்டுக் கொள்ளுதல்,எண்ணெய் தெறித்து காயமாதல் போன்றவை நடக்கின்றது.

தீக்காயங்கள் ஏற்பட்ட உடன் எந்த அறிகுறிகளும் தெரியாது.சிறிது நேரம் ஆன பிறகே தண்ணீர் கொப்பளங்கள் உருவாகி வலி மற்றும் எரிச்சலை தரும்.சிலர் வலி பொறுக்க முடியாமல் அதை உடைத்துவிடுகின்றனர்.இதனால் அவை நாளடைவில் தழும்பாக மாறிவிடுகிறது.

தீக்காய கொப்பளங்கள் ஒருசில வாரங்களில் ஆறிவிடும் என்றாலும் அவற்றை சீக்கிரம் குணப்படுத்தும் வைத்திய முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தீக்காயங்கள் ஏற்பட்ட பிறகு அவ்விடத்தை தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.சிலர் அவ்விடத்தில் இங்க தெளிப்பார்கள்.சிலர் சேற்றை அள்ளி பூசுவார்கள்.

தீக்காயம் ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்ட இடத்தை தண்ணீரில் வைக்க வேண்டும்.குளிர்ந்த இருக்க வேண்டியது முக்கியம்.அதன் பிறகு கற்றாழை ஜெல்லை தீக்காயங்கள் மீது பூசி சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.

அதன் பிறகு குளியல் சோப் பயன்படுத்தி தீக்காயம் ஏற்பட்ட பகுதியை கழுவ வேண்டும்.அதன் பின்னர் ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சு பயன்படுத்தி தீக்காயங்கத்தை துடைக்க வேண்டும்.தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் சுத்தமான தேனை தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறுவதோடு தழும்புகள் உருவாகாமல் இருக்கும்.

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.அதேபோல் வைட்டமின் ஈ எண்ணெயை தீக்காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் ஆறும்.தீக்காயம் உண்டான இடத்தில் கடலை மாவை தூவினால் அவை சில தினங்களில் ஆறிவிடும்.

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து தீக்காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்தினால் அவ்விடத்தில் தீக்காயத் தழும்பு உருவாகாது.