WEIGHT LOSS-க்கு மருத்துவர் சொல்லும் பெஸ்ட் உணவுகள்!! ஒரு வாரத்தில் 3 கிலோ எடை குறைக்கலாம்!!

Photo of author

By Divya

WEIGHT LOSS-க்கு மருத்துவர் சொல்லும் பெஸ்ட் உணவுகள்!! ஒரு வாரத்தில் 3 கிலோ எடை குறைக்கலாம்!!

Divya

பெரும்பாலானோர் உடல் எடையை அதிகரிப்பால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.உடல் எடையை குறைக்க பல வகை விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் மார்க்கெட்டில் வித விதமான பொருட்கள் கிடைத்தாலும் அவற்றை பயன்படுத்தி தற்செயலாக மட்மே உடல் எடையை குறிக்க முடியும்.

நிரந்தரமாக உடல் எடை குறைய நாம் எப்பொழுதும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.சீரான வாழ்க்கை முறையுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள்:

1)நீரிழிவு நோய்
2)மாரடைப்பு
3)இரத்த அழுத்தம்
4)உயர் இரத்த அழுத்தம்
5)உடல் சோர்வு
6)பக்கவாதம்
7)பேட் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு

உடல் எடையை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்:

1.கடல் மீன்,முட்டை,இறைச்சி போன்றவை உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.இதில் நிறைந்துள்ள புரதச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.

2.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

3.முழு தானிய உணவுகள்,பச்சை இலை காய்கறிகள்,கீரைகள் போன்றவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

4.உணவு உட்கொள்வதற்கு முன் அதாவது 10 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் பசி உணர்வு குறையும்.இதனால் குறைவான அளவு மட்டுமே உணவு உட்கொள்வீர்கள்.

5.பயறு வகைகளை முளைகட்டி வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.தண்ணீர்,க்ரீன் டீ,மூலிகை பானங்கள் எடை இழப்பிற்கு உதவும்.

6.கொழுப்பு,எண்ணெய் உணவுகளை தவிர்த்துவிட்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

7.சியா விதைகளை ஊறவைத்து தினமும் காலை நேரத்தில் குடிப்பதன் மூலம் உடல் எடை கட்டுக்குள் வைக்கலாம்.

8.வெந்தய பானம்,எலுமிச்சை பானம்,இஞ்சி மற்றும் பூண்டு பானங்கள் எடை இழப்பிற்கு உதவுகிறது.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிடுதல்,காய்கறி சூப் பருகுதல் போன்ற செயல்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

9.அதிகளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.