தேனீ வண்டு குளவி சிலந்தி கடிக்கு பெஸ்ட் கை வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!

0
186
Best Hand Remedy for Bee Beetle Wasp Spider Bite!! Try it now!
Best Hand Remedy for Bee Beetle Wasp Spider Bite!! Try it now!

தேனீ வண்டு குளவி சிலந்தி கடிக்கு பெஸ்ட் கை வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!

உங்களை வண்டு,தேனீ,குளவி உள்ளிட்ட பூச்சிகள் கடித்து விட்டால் அவை அலர்ஜி,அரிப்பு,எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.எனவே அதை அலட்சியப் படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

பூச்சு கடிக்கு பெஸ்ட் கை மருந்துகள்:

*இலவங்கப்பட்டை

ஒரு துண்டு இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி வண்டு,பூச்சி கடித்த இடத்தில் பூசினால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

*ஐஸ் பேக்

வண்டு,பூச்சி கடித்த இடத்தில் ஐஸ் பேக் ஒத்தடம் கொடுத்தால் வலி,வீக்கம் குணமாகும்.

*வெங்காயம்

ஒரு சின்ன வெங்காயத்தை நசுக்கி வண்டு,குளவி,பூச்சி கடித்த இடத்தில் பூசினால் அவை தினங்களில் குணமாகி விடும்.

*துளசி
*கட்டி கற்பூரம்

உரலில் சிறிது துளசி மற்றும் கட்டி கற்பூரம் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை வண்டு,குளவி,பூச்சி கடித்த இடத்தில் பூசினால் அவை தினங்களில் குணமாகி விடும்.

*புதினா
*துளசி

இவை இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி பூச்சி கடித்த இடத்தில் அப்ளை செய்யவும்.இதனால் வலி,வீக்கம் முழுமையாக குறையும்.

*டூத் பேஸ்ட்
*கற்றாழை ஜெல்

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் போட்டு நன்கு கலந்து விடவும்.பின்னர் இந்த பேஸ்டை பூச்சி கடித்த இடத்தில் அப்ளை செய்யவும்.இதனால் வலி,வீக்கம் முழுமையாக குறையும்.

*டீ பேக்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு டீ பேக் போட்டு சூடுபடுத்தவும்.இந்த டீ பேக்கை வண்டு,பூச்சி,குளவி கடித்த இடத்தில் பூசினால் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.