உடல் பிணிக்கு சிறந்த கை மருந்து!! இனி டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது!!

Photo of author

By Gayathri

நம் உடலில் உருவாகும் சிறு சிறு வியாதிகளை மருந்து மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும்.

 

1.காய்ச்சல்

 

சுக்கு,மிளகு,திப்பிலியை சம அளவு எடுத்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து பருகினால் காய்ச்சல் குணமாகும்.

 

2.கழுத்து வலி

 

50 மில்லி நல்லெண்ணெயில் எருக்கம் பூவை போட்டு காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கழுத்துவலி குணமாகும்.

 

3.உடல் உஷ்ணம்

 

எலுமிச்சம் பழ சாறில் ரசம் செய்து பருகி வந்தால் உடலில் உள்ள உஷ்ணம் நீங்கிவிடும்.

 

4.மூட்டு வலி

 

கோதுமையை வறுத்து பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

 

5.முதுகு வலி

 

தேங்காய் எண்ணெயில் இரண்டு கற்பூரத்தை போட்டு காய்ச்சி முதுகு வலி உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

 

6.தீக்காயம்

 

வேப்பங் கொழுந்து மற்றும் பசுமோரை அரைத்து தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் பூசினால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.

 

7.உடல் வலி

 

தூதுவளை இலை,கருப்பு மிளகு மற்றும் சீரகத்தை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால் உடல் வலி குறையும்.

 

8.கரும்புள்ளி

 

உருளைக்கிழங்கை வெட்டி சாறு எடுத்து கரும்புள்ளிகள் மீது பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

 

9.கால் வீக்கம்

 

வசம்பை அரைத்து காலில் பற்றுபோட்டு வந்தால் வீக்கம் குறையும்.அதேபோல் வெந்தயக் கீரை மற்றும் அத்திப்பழத்தை அரைத்து கட்டிகள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் ஆறும்.

 

10.தொண்டை வலி

 

கருமிளகை இடித்து கசாயம் செய்து பருகி வந்தால் தொண்டை வலி,இருமல் குணமாகும்.

 

11.ஞாபக சக்தி அதிகரிக்க

 

வல்லாரை கீரையை உணவாக எடுத்துக் கொண்டால் ஞாபக திறன் அதிகமாகும்.