சிறந்த மூன்றாம் பாலினர் விருது – அசத்திய முதல்வர்!

0
161

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்ற பொழுது முதல் முறையாக சிறந்த மூன்றாம் பாலினர் விருது முதல்வர் வழங்கப்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனியாக விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த சிறந்த மூன்றாம் பாலினர் விருது தூத்துக்குடியை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கைக்கு வழங்கப்பட்டது.

 

கிரேஸ் பானு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 30. முதன்முதலில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் நுழைந்த முதல் திருநங்கை இவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. மேலும் சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அங்கு நடந்த ஒரு சில தகாத நிகழ்வுகளால் தனது வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு போராட்ட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். தன்னைப்போல் சாதிக்கத் துடிக்கும் திருநங்கைகளுக்கு உதவும் வகையில் அவர் அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் திருநங்கைகளும் பங்கேற்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பெற்றதில் இவருக்கு பங்கு அதிகமாகவே உள்ளது. திருநங்கைகளும் கல்வி பெறவேண்டும் திருநங்கைகளும் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்று தொடர்ந்து பணியாற்றி வருகிறார் கிரேஸ் பானு.

 

இந்தியாவில் முதல் போலீஸ் S.I தேர்வான திருநங்கை பிரித்திகாவிற்கு தேவையான சட்ட உதவிகளை செய்து கொண்டுத்துளார். அதே போல் திருநங்கைகளுக்கும் சித்த மருத்துவம் படிப்பில் இடம் கிடைக்க  வேண்டும் என நீதிமன்றம் வரை சென்று போராடி அவருக்கும் வாங்கித் தந்துள்ளார்.

 

திருநங்கையின் முன்னேற்றத்திற்காக எப்பொழுதும் இவர் பாடுபட்டு வருகிறார் .அந்த சேவை மனப்பான்மையை பாராட்டித்தான் திருநங்கை கிரேஸ் பானுவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த மூன்றாம் பாலினர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

 

முதன் முதலாக இந்த விருதை பெற்ற கிரேஸ் பானுவுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

 

 

Previous articleவாய்ச்சொல் வீரனாக பிரதமர்! காங்கிரஸ் விமர்சனம்!
Next articleநாங்கள் எங்கு செல்வோம்? இது எங்கள் தாய்நாடு! காபூல்-டெல்லி விமானத்தில் திரும்பிய ஆப்கானிஸ்தான் மக்கள்!