எந்த ராசிக்காரர்கள் எந்த காலத்தில் திருமணம் செய்யவேண்டும்? பார்க்கலாம் வாங்க !

0
187

மேஷம்:

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கோடைகால தொடக்கத்தில் அதாவது ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்துகொண்டால் அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ரிஷபம்:

வசந்த காலம் அல்லது இலையுதிர் காலம் ரிஷா ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்துகொள்ள உகந்த காலமாகும். இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் இவர்களது திருமணம் நடந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் வருடத்தின் எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் ஆனால் அது சமூகமயமாக்கல் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு கோடைகாலத்தில் திருமணம் செய்வது சிறப்பாக இருக்கும் மற்றும் இந்த ராசியில் உள்ள பெரும்பாலான நபர்கள் கடற்கரை பகுதியில் தங்களது திருமணத்தை நடத்த விரும்புவார்கள்.

சிம்மம்:

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் மத்தியில் அதாவது ஜூலை மதம் முதல் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்துவைக்கலாம், இது அவர்களுக்கு உற்சாகமான வாழ்க்கையை அளிக்கும்.

கன்னி:

இலையுதிர் காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்ய உகந்த நேரமாக கருதப்படுகிறது, இந்த பருவம் அவர்களுக்குள் ஒரு நல்ல ஆற்றலை கொடுக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் அவர்களது கல்யாணம் விமரிசையாகவும் அனைவரையும் கவரும்படியாகவும் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள், அதனால் இவர்களுக்கு இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் திருமணம் செய்து வைப்பது சிறந்தது.

விருச்சிகம்:

இந்த ராசிக்காரர்கள் குளிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், வருடத்தின் இருண்ட நாட்களில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும் வகையில் நீர் சூழந்த இடத்தின் அருகில் திருமணம் செய்துகொள்வது சிறப்பானதாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் கண்டிப்பாக கோடைகாலத்தில் திருமணம் செய்துக்கொள்வது நல்லது அவர்களுக்கு பெரும்பாலும் வெப்பமான சூழ்நிலை பிடிக்கும். அதேசமயம் இவர்கள் பயணத்தை விரும்புகிறவர்கள் என்றால் இந்த ராசிக்காரர்கள் குளிர்ச்சியான இடங்களுக்கு செல்லலாம்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள், கன்னி ராசிக்காரர்களை போலவே திருமணம் செய்துகொள்வதற்கு இலையுதிர் காலத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

கும்பம்:

பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொள்ள பருவக்காலத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், கல்யாணம் குறித்து அவர்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதை நோக்கியே செல்வார்கள்.

மீனம்:

மீனம் ராசியை சேர்ந்தவர்களும் பெரிதாக பருவக்காலத்தை கருத்தமாட்டார்கள் ஆனால் அவர்கள் நவம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொள்வது நல்லது.

Previous articleஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்?
Next articleவிளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்!