ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் அல்சர் இருக்கலாம்!

0
156

ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் அல்சர் இருக்கலாம்!

மாறிவரும் துரித உணவுகள் நிறைந்த வாழ்க்கை முறையாலும் மன அழுத்தத்தாலும் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர். அதிலும் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவர்களை தான் அல்சர் அதிகம் பாதிக்கின்றது.

அல்சர் சாதாரண குணமாக்கி விடக்கூடிய நோய் தான் என்றாலும் அது நாளடைவில் வயிற்று வலி,வயிற்று உப்புசம், வயிற்று எரிச்சல், இறுதியில் குடல் புற்றுநோய் வரை கொண்டு சென்று விடும். இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அல்சரின் ஆரம்ப அறிகுறிகள் என்ன அல்சரை கண்டறிவது எப்படி??எனக் காண்போம்.

1. அமில எதுக்களிப்பு
சாப்பிட்ட உணவு தொண்டை நோக்கி வருவது போன்று இருப்பது அல்சரின் ஆரம்ப அறிகுறி.

2. வயிற்று வலி
அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிறு மற்றும் நடு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். சாப்பிட்ட உடன் வயிற்றில் வலி இருப்பது இரைப்பையில் புண்கள் இருப்பதற்கான அறிகுறி. இதை gastric ulcer எனக் கூறுவர். சாப்பிட்டு 2 அல்லது 3 மணி நேரம் கழித்து வலி வருவது சாப்பிட்டவுடன் வலி குறைவது இவைகள் டியோடினல் அல்சரின் அறிகுறிகள் அதாவது சிறுகுடலில் புண்கள் இருப்பதற்கான அறிகுறிகள். வயிற்று வலி மிக அதிகமாக இருப்பதும் அல்சரின் அறிகுறி.

3. பசியின்மை
பொதுவாக அல்சர் இருப்பவர்களுக்கு உணவு செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். காரணமாக வயிற்றில் வாயுக்கள் அதிகரித்து வயிற்று உப்புசம், வயிறு மந்தநிலை, போன்றவை ஏற்படும். இதனால் அல்சர் இருப்பவர்களுக்கு பசியின்மை ஏற்படும். மேலும் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு, இதுவும் அல்சர் இருப்பதற்கான அறிகுறி.

4. குமட்டல் மற்றும் வாந்தி
வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் பொழுது குமட்டலுடன் கூடிய வாந்தி ஏற்படும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வாந்தி வருவது மற்றும் வாந்தி எடுக்கும் பொழுது சிறிது ரத்தம் வெளியாவது ஆகியவை அல்சரின் அறிகுறிகள்.

5. இரத்த சோகை
வயிற்றில் அதிக நாட்கள் அல்சர் இருக்கும் பொழுது அது வயிற்றுச் சுவரில் இருக்கக்கூடிய குடல் உறிஞ்சிகளை சேதப்படுத்தி உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் உடலில் சேர்வது தடுக்கப்பட்டு ரத்த உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் ரத்த உற்பத்தி குறையும். எனவே அனிமியா பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு அல்சர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் மலம் கழிக்கும் பொழுது ரத்தம் வெளியாகுதல் மற்றும் வாந்தி எடுக்கும் பொழுதும் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை அல்சரின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது நல்லது.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும்!
Next articleமூன்று நாட்கள் மட்டும் இதை குடித்து பாருங்கள்! கல்லீரல் வீக்கம் கல்லீரல் கொழுப்பு சரியாகும்!