இந்திய அணியில் எம் எஸ் தோனி 2007 ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியில் முக்கிய ஸ்பின்னராக இருந்தவர் தான் ஹர்பஜன் சிங் 2007 மற்றும் 2011 உலக கோப்பை வெற்றி போட்டிகளில் ஹர்பஜன் சிங் முக்கிய பங்காற்றினார்.
ஹர்பஜன் சிங் க்கு பின்னர் ஜடேஜா மற்றும் அஸ்வின் அவர்களின் சிறப்பான எழுச்சியின் காரணமாக ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.அதன் பின் csk அணியில் தோனியின் தலைமையில் விளையாடினார் அதன் பின் 2020 ல் ஐ பி எல் தொடரில் இருந்து விலகினார்.
பிறகு தோனியை விமர்சிக்கும் பட்டியலில் இணைந்தார். தொனியை கடுமையாக விமர்சிக்கும் நபர்களில் இவரும் ஒருவரானார். இந்நிலையில் தோனி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பும் போது அவர் நான் தொனியுடன் பேசுவதில்லை. அவருடன் பேசி 10 ஆண்டுகள் ஆகிறது. மைதானத்தில் நாங்கள் விளையாட்டை பற்றி மட்டும் பேசி கொள்வோம்.
நான் இவ்வாறு பேசாமல் இருக்க எனக்கு எந்த காரணங்களும் இல்லை. ஒருவேளை தோனிக்கு இருக்கலாம். நான் அவரிடம் பேசுவதற்கு முயற்சிப்பதில்லை. எனக்கு மதிப்பளிப்பவர்களிடம் மட்டும் நான் பேசுவேன் என்று அவர் கூறியது தற்போது பெசுபோருளாகியுள்ளது.