பாக்யராஜின் முதல் மனைவி இந்த பிரபல நடிகையா..?? திருமணமான இரண்டே ஆண்டில் உயிரிழந்த சோகம்..!!
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் தான் பாக்யராஜ். இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு இன்றளவும் இவரின் பெயர் சொல்லும் படமாக உள்ளது. அந்த அளவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பாக்யராஜின் முதல் மனைவி யார்? அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாக்யராஜின் முதல் மனைவி வேறும் யாருமல்ல பிரபல நடிகை பிரவீணா தான்.
இவர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலை படத்தில் சிறிய கேரக்டர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் பிரவீணாவிற்கு சிறிய கேரக்டர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இருப்பினும் தனக்கென தனி இடத்தை பிடிக்க வேண்டுமென பிரவீணா தொடர்ந்து போராடி வந்தார். அந்த சமயத்தில் பாக்யராஜூம் சினிமாவில் சாதிக்க வேண்டுமென போராடி கொண்டிருந்தார்.
இருவரும் நட்பாக பழகி பின் நட்பு காதலாக மாறியது. இப்படி உள்ள சூழலில் பாக்யராஜ் ஹீரோவாக நடித்த பாமா ருக்மணியில் தான் நடிகை பிரவீணாவிற்கு முதன் முறையாக இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெளியான அடுத்த ஆண்டே அதாவது 1981ஆம் ஆண்டே பிரவீணா அவரின் காதலரான பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த பிரவீணா 1983ஆம் ஆண்டு மஞ்சள்காமாலை காரணமாக தனது 25வது வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து 1984ஆம் ஆண்டே பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.