கண்ணம்மா கதாபாத்திரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்.!

0
87

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் சீரியலில் வெண்பா வுக்கும்-கண்ணம்மா வுக்கும் இடையே நடக்கும் போட்டியே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியல் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது‌. ஹீரோயினாக நடிக்கும் ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சோகம் அடையச் செய்துள்ளது.

தற்போது, தெரியவரும் தகவலின்படி அடுத்த இரண்டு வாரங்கள் மட்டுமே ரோஷினி கண்ணம்மாவாக நடிப்பார் என்றும். அதன்பின், அந்த கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திரா அல்லது டிக்டாக் பிரபலம் வினுஷாதேவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும், ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ரோஷினியை மாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணம்மா இனிமேல் இல்லை என்பதுபோல் எமோஜி ஒன்றை போட்டு பதிவிட்டுள்ளார்.

இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோயின் மாற்றம் மட்டுமல்லாமல் கண்ணம்மா கதாபாத்திரமே இல்லாதது போல் தெரிகிறது‌. தற்போது இந்த பதிவு பாரதிகண்ணம்மா ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.