முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

Photo of author

By Parthipan K

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

பாரதி ராஜா நடிக்கும் மீண்டும் ஒரு மரியாதை என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர் இயக்கி நீண்ட வருடங்களாக ரிலீஸாகாமல் முடங்கி கிடந்த மீண்டும் ஒரு காதல் திரைப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம்பெண் ஒருவருக்கும் வயது முதிர்ந்த ஒருவருக்கும் இடையிலான நட்பைப் பற்றிய கதையான இதை த்ரில்லர் பாணியில் இயக்கியுள்ளார் பாரதிராஜா. படம் ரிலிஸாகாவிட்டாலும் முக்கிய பிரமுகர்கள் பலர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

முதலில் ஓம் எனப் பெயரிடப்பட்டு 2014 ஆம் ஆண்டே இந்த படத்தை தொடங்கினார் பாரதிராஜா. ஆனால் பல பிரச்சனைகளால் படம் தாமதமாகிக் கொண்டே போனது. இந்நிலையில் இதே போன்ற கதைக்களத்தில் பாரதிராஜாவின் முதல் மரியாதை வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்துக்கு மீண்டு ஒரு மரியாதை எனப் பெயரிடப்பட்டுள்ளதால் அந்த படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.