கர்ப்பிணிகளுக்கு இனி விசா கிடையாதா? டிரம்ப் அதிரடி முடிவால் பரபரப்பு!

0
102

வெளிநாட்டு கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும்போது அங்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எளிதில் அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடுகிறது. இதனை அடுத்து வேண்டுமென்றே கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனிமேல் விசா விண்ணப்பிக்கும் போது பெண்கள் கர்ப்பிணியாக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எத்தனை மாத கர்ப்பிணியாக உள்ளனர்? அவர்கள் எத்தனை மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர்? அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது கர்ப்பமாகும் ஐடியா இருக்கிறதா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு அதன் பின்னரே விசா வழங்கப்படும் என்று குடியுரிமை அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.

இதனால் இனிமேல் அமெரிக்கா சென்று குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு மிக எளிதில் அமெரிக்க குடியுரிமை பெற்று விடலாம் என்ற எண்ணம் பலிக்காது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் சீனா நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் அமெரிக்காவில் குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை கட்டுப்படுத்தவே அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk